ஈரோடு ஆக 14:

சுதந்திர தினவிழாவில் நற்சான்றிதழ் பெற டி.எஸ்.பி., உள்பட 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பாக பணியாற்றிதற்காகவும், சேவையாற்றியதற்காகவும் தமிழக அரசின் சார்பில் சுதந்திர தினத்தன்று நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த கலெக்டர்கள் நற்சான்றிதழ் வழங்குவார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், குற்ற வழக்குகளை திறம்பட கையாண்டதற்காகவும் டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படையினர், போக்குவரத்து போலீசார் தலா 2 பேர் உள்பட மொத்தம் 30 போலீசார் நற்சான்றிதழ் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சுதந்திர தினவிழாவின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நற்சான்றிதழ் வழங்க உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today