ஈரோடு நவ 19:

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் இன்று 2வது நாளாக ஜவுளித்துறையினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்தும், நூல் விலையை 2 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் நேற்று முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2வது நாளாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர்கள், டையிங், நூல் வியாபாரிகள், பிளீச்சிங், டையிங் உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், ஜவுளி குடோன்கள் உள்பட 18க்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டத்தின் காரணமாக ரூ.60 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடும் நெருக்கடியில் உள்ளதால் நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடையடைப்பு போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜவுளி சார்ந்த இணை சங்கங்களை கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு கலைச்செல்வன் கூறினார். https://www.texmin.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/