சத்தியமங்கலம் சூன் 26 : ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில் ஈரோடு – கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தொலைதுார மலை கிராமங்களில் உள்ள மணவர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க முயற்சி எடுத்துள்ளனர் .இதன்படி, தென்னக ரயில்வே துறையில் பயிற்றுனர்க்கு விண்ணப்பிக்க உதவும்படி, ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் உதவி மையம் கடந்த 12 ம் தேதி துவங்கி இதுவரை 254 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக காவல் துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் ஆகியோர் சத்தியமங்கலம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மாநில எல்லை மலை கிராமத்தில் தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்து, சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து வாழ்வாதார மேம்பாட்டு யுக்திகளை தெரிவித்தனர்.மலைவாழ் மக்கள், பழங்குடி இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த 71 நபர்களுக்கு தென்னக ரயில்வே பயிற்றுனர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப உதவி செய்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே