ஈரோடு அக்.21:

ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி ஈரோட்டில் 28 அமைப்புகள் கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பன்னீர்செல்வம் பார்க்கில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே அம்பேத்கர் சிலையையும் வைக்க அனுமதி கோரி புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளருமான சண்முகம் தலைமையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழ்புலிகள் கட்சி, அருந்ததியர் இளைஞர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் பேரவை, திராவிடர் விடுதலை இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட 28 அமைப்புகள் சார்பில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் மனு வழங்கப்பட்டது. https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/