ஈரோடு நவ 10:

தீபாவளி விடுமுறைக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாததால் ஈரோட்டில் 25 சதவீத விசைத்தறிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலார், சித்தோடு, விஜயமங்கலம், சித்தோடு, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றி வந்ததால் தீபாவளிக்காக குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். உள்ளூர் தொழிலாளர்கள் 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் திங்கட்கிழமை பணிக்கு திரும்புவதாக கூறியிருந்தனர். ஆனால் உள்ளூர் தொழிலாளர்களும் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பாததால் 25 சதவீத விசைத்தறிகள் மட்டுமே மாவட்டத்தில் செயல்பட்டு வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆர்டர்களின் பேரில் உற்பத்தி செய்யப்படும் விசைத்தறி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.msmetamilnadu.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/