ஈரோடு சூலை 8:

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் உள்ளது. இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3ம் தேதி வரை அவகாசம் உள்ளது. 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற காலியாக உள்ள இடங்கள், பள்ளிகளை அறிய, rte.tnschools.gov.in இணைய தளத்தில் அறிந்து விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் 107 மெட்ரிக் பள்ளிகள், ஒரு சுய நிதி பள்ளி, 89 துவக்க, மழலையர் பள்ளிகளில், 25 சதவீத ஒட ஒதுக்கீடு சேர்க்கைக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 14 வட்டாரங்களிலும் ஒவ்வொரு பள்ளிகள் ஒதுக்கப்பட்டு, இதற்கான விபரங்கள் தெரிவிக்கப்படும். தவிர முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், 14 வட்டாரங்களில் உள்ள வட்டார கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

பிறப்பு சான்று, இருப்பிட சான்று, மருத்துவமனை பதிவு, அங்கன்வாடி பதிவேடு நகல், உறுதி மொழி சான்று, ஆதார் அட்டை, போட்டோ ஆகியவை இணைக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அந்தந்த பகுதியில் வட்டார கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today