ஈரோடு நவ 13:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இதில், தென்வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று வரை பரவலாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
கொடுமுடி -6.8, பெருந்துறை- 4, பவானி- 15.2, கோபி- 30.6, சத்தி- 17, பவானிசாகர் -14.2, தாளவாடி- 23.6, நம்பியூர் -9, சென்னிமலை- 4, மொடக்குறிச்சி -6, கவுந்தப்பாடி- 17.2, அம்மாபேட்டை- 20, கொடிவேரி -23.3, குண்டேரிப்பள்ளம் -22.4, வரட்டுப்பள்ளம் -16 என மாவட்டத்தில் மொத்தம் 246.3 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. https://www.imdchennai.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today