ஈரோடு நவ 15:

நுால் விலை உயர்வை கண்டித்து வரும் 17, 18 ஆகிய இரு தினங்கள் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடத்துகின்றனர். இதுபற்றி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கே.கலைசெல்வன் கூறியதாவது: தேசிய அளவில் ஜவுளி சார்ந்த தொழிலில் பல கோடிப்பேர் உள்ளனர். சமீப காலமாக நுால் விலை அடிக்கடி உயர்வதால், இத்தொழில் சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

கடந்த 40 நாளில் 40ம் நம்பர் நுால் ஒரு கிலோ 250 ரூபாயில் இருந்து 330 ரூபாய், 30ம் நம்பர் நுால் 200ல் இருந்து 290, 20ம் நம்பர் நுால் 140ல் இருந்து 190 ரூபாய், வெப்ட் 40ம் நம்பர் ஒரு பாக்கெட் 11 ஆயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரத்து 200 ரூபாய் என கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஆர்டர் பெற்றவர்கள், நுால் விலை உயரும்போது அதனை ஆர்டர் பெற்ற தொகைக்குள் நிறைவு செய்ய முடியாமல், மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, நுால் விலையை இரண்டு மாதம் அல்லது ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும். தினமும் உயர்த்தும் நடைமுறையை கைவிட வேண்டும், என்பதை வலியுறுத்தி, வரும் 17ம் தேதி மற்றும் 18 ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் செய்கிறோம். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த கடைகள், குடோன் போன்றவை கடையடைப்பில் ஈடுபடும்.இவ்வாறு கூறினார். https://www.texmin.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/