ஈரோடு நவ 13:
சிப்காட் மற்றும் பெரியாண்டி பாளையம் துணை மின் நிலையங்களில் வருகின்ற 16ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால் பெருந்துறை கோட்டத்தை சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம் பாளையம், பெருந்துறை கோட்டத்தை சார்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி,தொட்டம்பட்டி,
வாய்பாடி புதூர், கவுண்டம் பாளையம், மாடுகட்டி பாளையம், எளையாம் பாளையம், துளுக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் ஈரோடு மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://www.tnebltd.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/