ஈரோடு நவ 26:

ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான 1,690 மெட்ரிக் டன்கள் உரங்கள் ரயில் மூலம் வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகள், தடப்பள்ளி அரக்கன் கோட்டை, மேட்டூர் வலதுகரை வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் நெல், மக்காச்சோளம், கரும்பு, வாழை மற்றும் இதர பயிறுகளுக்கு யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது.

உர தேவைக்கேற்ப அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,225 மெட்ரிக் டன்கள் யூரியா உரம் ரயில் மூலம் பெறப்பட்டது. இதே போல குஜராத் மாநிலத்தில் இருந்து 810 மெட்ரிக் டன்கள் யூரியா மற்றும் அம்மோனியம் சல்பேட் என 1,690 மெட்ரிக் டன்கள் உரம் ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்துள்ளது.

யூரியா மற்றும் அம்மோனியம் சல்பேட் உரங்கள் தேவைக்கேற்ப சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. உர விற்பனை நிலையங்கள் யூரியா உரத்துடன் வேறு எவ்வித இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு கூறினார்.  https://www.fert.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/