ஈரோடு நவ 9:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 165 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/