ஈரோடு ஜூன் 4: ஈரோடு மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர், வி.ஏ.ஓ., ஊரக வளர்ச்சி துறை அலுவலர் என நியமிக்கப்பட்டு, தினமும் அங்குள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என விசாரித்து, நடவடிக்கை எடுக்கின்றனர்.நேற்று முன்தினம் வரை மாவட்ட அளவில் 61,408 பேர் கொரானாவால் பாதித்து 44,932 பேர் குணமடைந்தனர். 16,087 பேர் சிகிச்சையில் உள்ளனர். 390 பேர் இறந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 156 தனிமைப்பகுதியில் 11,035 பேர் கொரானா மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள், சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெறுவோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை 7 லட்சத்து ஏழு ஆயிரத்து 839 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். 2 லட்சத்து 29 ஆயிரத்து 732 பேர் கொரானா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 41,677 பேர் உள்ளனர்.
நிருபர்.
ஈரோடு டுடே