ஈரோடு டிச 2:

ஈரோடு மாவட்டத்தில் 15 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கு வினோத், சித்தோடுக்கு மணிகண்டன், கொடுமுடிக்கு நாட்ராயன், பவானிசாகருக்கு ரமேஷ், மலையம்பாளையத்துக்கு வேலுசாமி, சிவகிரிக்கு பாலுவும், மொடக்குறிச்சிக்கு சுரேஷூம், பெருந்துறைக்கு செந்தில், ஆசனுாருக்கு ஜெகநாதன் என மாவட்டத்தில் 15 தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.

தனிப்பிரிவு போலீசார் நேற்று புதிய பணியிடத்தில் சேர்த்தனர். நீண்ட நாட்களாக தனிப்பிரிவில் பணியாற்றியவர்கள், புகாருக்கு ஆளான சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். https://www.tnpolice.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/