ஈரோடு சூன் 12: ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குப்பின் நேற்று 13 ஆயிரத்து 400 தடுப்பூசி வந்ததால், முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி துவங்கியது.கொரானா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி மத்திய அரசு ஒதுக்காததால் கடந்த வாரம் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தடுப்பூசி ஒதுக்கப்பட்டு, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு 13 ஆயிரத்து 400 தடுப்பூசியும், முன்களப்பணியாளர்களுக்காக 2 ஆயிரம் தடுப்பூசியும் வந்தது.நேற்று காலை ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய 8 ஒன்றியங்களில் உள்ள முன்களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.திங்கள் கிழமை முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி துவங்க உள்ளது, என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
நிருபர்.
ஈரோடு டுடே