கொடுமுடி நவ 30:

கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. 10,702 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 27 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 89 காசுக்கும் சராசரி விலையாக 29 ரூபாய் 65 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 3 ஆயிரத்து 131 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 இலட்சத்து 92 ஆயிரத்து 66 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் தேங்காய் பருப்பு 233 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் 55 காசுக்கும், அதிகபட்ச விலையாக 109 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 108 ரூபாய் 69 காசுக்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்ச விலையாக 105 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 94 ரூபாய் 89 காசுக்கு ஏலம் போனது.

மொத்தம் 10 ஆயிரத்து 321 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 9 இலட்சத்து 96 ஆயிரத்து 273 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் எள் 38 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் வெள்ளைரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 106 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 107 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 106 ரூபாய் 99 காசுக்கும், சிவப்பு ரகம்  ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 88 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 108 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 97 ரூபாய் 99 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 795 கிலோ எடையுள்ள எள் 2 இலட்சத்து 75 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு, எள் சேர்த்து 13 லட்சத்து 63 ஆயிரத்து 555 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. https://www.tnagrisne.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/