ஈரோடு டிச 21:

ஈரோட்டில் கைத்தறி உற்பத்தி ஜவுளி ரகங்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே தமிழ்நாடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் சங்க முடிவின் படி, ஈரோடு மாவட்ட பிரதம நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், கைத்தறி உற்பத்தி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டத்தில் உள்ள 180 கூட்டுறவு சங்க பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், துணை தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் தாமோதரன், சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்க நெசவாளர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://www.cooptex.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today