ஈரோடு டிச 20:

தி.மு.க.,வின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அவருடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், தமிழக கேபிள் டி.வி. வாரியத்தலைவர் குறிஞ்சி சிவகுமார், ப.க.பழனிச்சாமி, ஆ.செந்தில்குமார், திண்டல் டி.எஸ்.குமாரசாமி, யூனியன் சேர்மன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.mohua.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today