பெருந்துறை ஜூன் 3: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில்மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார்.மருத்துவ கல்லுாரி வளாகம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஈரோடு வனக்கோட்டம் சார்பில் 800 மரக்கன்றுகளும், சத்தியமங்கலம் வனக்கோட்டம் சார்பில் 200 மரக்கன்றுகளையும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நட்டு வைத்தார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடும்போது, பொதுமக்கள், ஏழைகளுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க வேண்டும். பொது இடங்களில், சாலை ஓரங்கள், தெருக்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலைமை வன பாதுகாவலர் மற்றும் கள அலுவலர் நிஹார் ரஞ்சன், ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன், ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே