ஈரோடு சூன் 13: ஈரோடு மாவட்டத்தில் கொரானா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளில்  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தவிர சிறப்பு மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கொரானாவால் மதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெருந்துறையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்கனவே கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரானாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசின் சித்தா மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சித்தா மருத்துவ பிரிவில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிருபர்.
ஈரோடு டுடே