ஈரோடு 7: கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை திட்டங்கள் குறித்து உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது.தேர்தலுக்கு முன்பாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்று பயணத்தில் பெறப்பட்ட மனுக்களை 100 நாளில் தீர்வு காண்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்படி அம்மனுக்கள் சென்னையில் பிரித்து அந்தந்த மாவட்டங்களின் விசாரித்து நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு வரப்பெற்ற மனுக்கள், அதன் விசாரணை நிலை, எடுக்க்பட்ட நடவடிக்கை குறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்த பேசியது,கொரோனா தடுப்பு பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதால் மாவட்டத்தின் பிற திட்டப்பணிகளை செயல்படுத்த முடியவில்லை. அனைத்து துறை சார்ந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.முத்லவராக பதவியேற்ற 100 நாளில் தேர்தலுக்கு முன் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும், என முதல்வர் அறிவித்தார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிற திட்டப்பணிகள் தொய்வாகவும், பாதியில் நிறுத்தப்பட்டும் உள்ளது. அவற்றை விரைவுபடுத்தி, மக்களுக்கு பயன்பாட்டை அளிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.டி.ஆர்.ஓ., முருகேசன், ஆர்.டி.ஓ., சைபுதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஏக்கர் ஜேசிங், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர்.
ஈரோடு டுடே