ஈரோடு டிச 8:
முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதி வசூலான கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டு சாதனை எட்டப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் படை வீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் படைவீரர் நிதி வசூல் செய்யும் பணி துவக்கி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்து பேசியதாவது, ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படை வீரர் கொடி நாள் நிதி வசூல் இலக்காக ரூ.86 லட்சத்து 40 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ.1 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்துதுறை அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தாண்டு படை வீரர் கொடி நாள் நிதிவசூல் இலக்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கினை அடைய அனைத்து தரப்பினரும் கொடிநாள் நிதியை தாராளமான வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/