ஈரோடு ஜூன் 2: தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு உறுப்பினர்களின் பங்களிப்பாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலைவர் ஆனந்தன், இணைச்செயலாளர் நந்தகுமார், மாநில பொருளாளர் வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர்.
ஈரோடு டுடே