ஜூன் 8: பவானி வட்டம் சன்னியாசிபட்டி கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் நடந்தது.பவானி வேளாண்மை உதவி இயக்குனர் குமாரசாமி மண் மாதிரிகளை சேகரித்து, விவசாயிகளிடம் கூறியது,பவானி யூனியன் பகுதியில் நடப்பாண்டு 20 வருவாய் கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடக்கிறது. மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு, களர், உவர், அமில பிரச்னைகள் குறித்து மண் வள அட்டையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். மண் வள அட்டையில் தெரிவித்துள்ள விபரங்களுக்கு ஏற்ப, மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரை தேர்வு செய்து பயிரிடலாம்.இதன் மூலம் விவசாயத்துக்காகும் செலவு, உரமிடுதல் செலவு குறையும். மகசூல், வருவாய் அதிகரிக்கும். விவசாயிகள் கட்டாயமாக மண் பரிசோதனை செய்வது அவசிமாகும், என்றார்.பவானி வேளாண்மை அலுவலர் வனிதா, துணை வேளாண் அலுவலர்கள் அப்புசாமி, உதவி வேளாண் அலுவலர் சித்தையன், சன்னியாசிபட்டி பஞ்சாயத்து தலைவர் சித்திரசேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே