ஈரோடு சூன் 15: கடந்த 2017 ஜனவரி ஒன்று முதல் 2019 டிசம்பர் 31 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்கள், மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை மீண்டும் புதுப்பிக்காலம்.தற்போது கொரானாவுக்கான முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே தங்கள் படைவிலகல் சான்று நகல், அடையாள அட்டை நகல், அசல் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை பதிவஞ்சலில் ‘துணை இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 106/3, காந்திஜி சாலை, ஜவான்ஸ் பவன் – மூன்றாம் தளம், ஈரோடு’ என்ற முகவரிக்கு அனுப்பி, பதிவை புதுப்பிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
நிருபர்.
ஈரோடு டுடே