ஈரோடு ஜூன் 3: ஈரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டுவதால், நேற்று போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடைகள் வழங்கப்பட்டன.இதனால் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா ரவுண்டானா, காளை மாட்டு சிலை ரவுண்டானா என அனைத்து இடங்களிலும் போலீசார் வாகனங்களை தணிக்கை செய்து, நகருக்குள் அனுமதித்தனர். இ பாஸ், இ பதிவு பெற்றவர்களை மட்டும் நகருக்குள் நுழைய அனுமதித்தனர். பதிவுகள் இல்லாதவர்களை திரும்பி அனுப்பி வைத்தனர்.அதேநேரம் அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டவர்கள், குடைகளுடன் சாலையில் நின்று, வாகனங்களை நிறுத்தினர். ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் போலீசார் குடைகளுடன் பணியில் ஈடுபட்டனர். காளை மாட்டு சிலை பகுதியில் மட்டும், சேமியானா அமைத்து, அதற்குள் வாகனங்களை வரவைத்து தணிக்கையில் ஈடுபட்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே