சத்தியமங்கலம் மே 30: சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் மிளகாய் சாகுபடி அதிகமாக நடக்கும் நிலையில், தற்போது விலை கிடைக்காததால் செடியில் பறிக்காமல் விட்டனர்.சத்தியமங்கலம், பவானி, பவானிசாகர், கோபி பகுதியில் அதிகமாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகம், கேரளா, கர்நாடகாவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஊரடங்கால் பறிக்கப்படும் மிளகாய் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் பறிக்கப்பட்ட மிளகாயை வாங்க ஆள் இல்லாததால், பழுத்து வீணானது. இவற்றை பறிப்பதற்காக ஆகும் கூலியைவிட குறைவாகவே, மிளகாய்க்கு விலை கிடைப்பதால், பல விவசாயிகள் மிளகாயை பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுள்ளனர்.அவை உதிர்ந்தும், பழுத்தும், அழுகியும் வீணாக காணப்படுகிறது. இன்னும் சில வயல்களில் தண்ணீர் பாய்ச்சாமல் செடியுடன் வீணாகி கிடக்கிறது.

நிருபர்.
ஈரோடு டுடே