ஈரோடு சூன் 24: ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். ஈரோடு சூளை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது48). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் ஜெயலட்சுமி. உடல் நலக்குறைவு காரணமாக மாதேஸ்வரன், தனலட்சுமி 2 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக மகள் ஜெயலட்சுமி இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். நேற்று காலை 7.45 மணிக்கு ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அப்போது வீட்டில் இருந்த 2 பீரோவில் ஒரு பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலைந்து கிடந்தன. மேலும் உடைக்கப்பட்ட பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே