ஈரோடு சூன் 22: கொரோனா ஊரடங்கு நிலையில் ஓட்டல்களில் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது. காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் பார்சல் மூலம் மட்டும் உணவு விற்பனை செய்யலாம். தற்போது பெரும்பாலான கடைகளில் உணவு பொருட்கள், வடை, பச்சி, போண்டா உள்ளிட்ட திண்பண்டங்களையும் பேப்பர், பிளாஸ்டிக் தாள், பாலித்தீன் கவர், சில்வர் பேப்பர், பேப்பர் பாக்ஸ் போன்றவைகளில் வழங்குகின்றனர். வாழை இலைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி வாழை இலையில் உணவை கட்டிக் கொடுக்க வேண்டும், என ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுபற்றி, அதிகாரிகள் கூறியது,பேப்பர், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் தாள், போன்றவைகளில் உணவை கட்டி கொடுக்கும்போது, எச்சில் தொட்டி பேப்பரை எடுக்கின்றனர். கவர்களை வாயால் ஊசி திறக்கின்றனர். இச்செயல் ஆரோக்கியமற்றதுடன், இதன் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்படும். எனவே, வாழை இலையில் கட்டி கொடுக்க வேண்டும், என ஓட்டல்களில் தெரிவித்துள்ளோம். பிளாஸ்டிக் பேப்பர், கவர் போன்றவைகள் மக்காத குப்பையாகி போகிறது. அதற்கு பதில் இலைகளை பயன்படுத்தினால் மக்கும் குப்பையாக விவசாயத்துக்கு வழங்கிவிடுவோம், என்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே