ஈரோடு சூன் 09: ஈரோடு மாவட்டத்தில் முழு முடக்கத்தால், அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத்தாரை விற்பனை செய்யும் வகையில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் அந்தியூர் அருகே புதுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் வரும் 12ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும், சத்தியமங்கலத்தில் வரும் 11ம் தேதி முதல் ஒவ்வொரு வெள்ளி கிழமையும், கோபிசெட்டிபாளையத்தில் வரும் 19ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழைத்தார் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்.வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு வரும் விபரத்தை, அந்தியூர் புதுப்பாளையத்துக்கு – 99427 12144, சத்தியமங்கலத்துக்கு – 94424 38188, கோபிசெட்டிபாளையத்துக்கு – 99762 53949 என்ற எண்ணுக்கு பதிவு செய்து ஏலத்துக்கு வாழைத்தாரை கொண்டு வர வேண்டும்.முககவசம் அணித்து, சமூக இடைவெளியுடன் வந்து ஏலத்தில் பங்கேற்கலாம், என கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே