ஈரோடு மே 31:-ஊரடங்கு நிலையில் காரணம் இன்றி வாகனங்களில் சுற்றி திரிவோருக்கு அபராதம் விதிக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் ஈரோடு எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.இதன்படி ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனை சாவடி, 42 தற்காலிக சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கை செய்கின்றனர். இ–பாஸ், இ–பதிவு பெறாத வாகனங்களை, மாநில, மாவட்ட எல்லைக்குள் அனுமதிப்பதில்லை.ஊரடங்கின் 7-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த, 200 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக, 750 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 800 இருசக்கர வாகனங்கள், 20 நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று மட்டும் 2.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

நிருபர்.
ஈரோடு டுடே