பெருந்துறை சூன் 23: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஊரடங்கு தளர்வால் வரும் 26ம் தேதி முதல் கொப்பரை தேங்காய் (தேங்காய் பருப்பு) ஏலம் நடக்க உள்ளது. வரும் 26ம் தேதி ஏலத்துக்கு விவசாயிகள் வரும் 23ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாத விவசாயிகளின் கொப்பரை தேங்காய் ஏற்கப்படமாட்டாது. வரும் 24ம் தேதி விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கொப்பரை தேங்காயை கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் கொப்பரை தேங்காயை நன்கு உலர வைத்து தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். விவசாயிகள், 96778 93302, 99427 50525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே