ஈரோடு 12: ஈரோடு மாவட்டத்தில் வருவாய் கணக்கு  தீர்வாயம் எனக்கூறப்படும் ஜமாபந்தி ஜூன் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளது.கொரானா பரவல் அதிகமாக உள்ளதால், ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் இணைய வழியில் அல்லது இ சேவை மையம் மூலம் பெறப்படும்.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இணைய வழியில் URL:https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய செயலியை பயன்படுத்தி அல்லது இ சேவை மையங்கள் மூலம் ஜூலை 31ம் தேதி வரை அனுப்பலாம். அம்மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படும்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்து தாலுகாவிலும் இத்தேதிகளில் ஜமாபந்தி நடத்தப்படும் என கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே