சத்தியமங்கலம் சூன் 24: சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக திம்பம் மலைப்பாதை மூலம் கர்நாடகா மாநிலம் செல்ல இயலும். பண்ணாரியில் துவங்கி திம்பம் மலைப்பாதையில், 26 கொண்டை ஊசி வளைவுகள் அபாயமாகவும், குறுகியதாகவும் இருக்கும். மலைப்பாதை ஆறாவது கொண்டை ஊசி வளைவில், கொள்ளேகாலில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மரம் லோடு ஏற்றி வந்த 16 சக்கர லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரியில் அடுக்கி கொண்டு வந்த மரத்தடிகள் சாலையில் உருண்டதால், டூவீலர் தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. பின் வேறு ஒரு லாரியை கொண்டு வந்து, மரத்தடிகளை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதேநேரம், கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த லாரியை துாக்கி நிறுத்தினர். சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்து சீர் செய்து, ஐந்து மணி நேரத்துக்குப்பின் போக்குவரத்து சீரானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே