ஈரோடு சூன் 25: ஈரோடு திண்டல் மேட்டில் உள்ள ஈரோடு கேன்சர் சென்டரில், கொரோனா நோயாளி மற்றும் நிமோனியா நோயாளிக்கு கதிரியக்கம் மூலமான ரேடியேஷன் சிகிச்சை மூலம் குணமடைய செய்துள்ளனர். கொரோனா நோயாளிக்கு அலோபதி சிகிச்சையுடன், சித்தா, ஆயுர்வேத முறைகளிலும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனை தடுக்க தடுப்பூசி போடும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையில் ரேடியேஷன் மூலம் கொரோனாவை குணப்படுத்த இயலும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து ஈரோடு கேன்சர் சென்டர் கதிர் வீச்சு புற்றுநோயியல் நிபுணர்களான ரா.சுரேஷ்குமார், கே.வேலவன் ஆகியோர் கூறியது,கொரோனா மற்றும் நிமோனியா நோயாளிகளுக்கு சி.டி, ஸ்கேன் செய்து நோய் தன்மை அறிந்து ‘3டி’ முறையில் குறைந்த அளவு கதிர்வீச்சு வழங்கி கொரோனா வைரசை அழிக்க முடிகிறது. கொரோனா பாதிப்புடன் தற்போது இறப்பு அதிகமாகிறது. இதற்கு கட்டுப்பாடற்ற அழற்சி என்றும், ‘சைட்டோகைன் ஸ்டாம்’ என்றும் கூறுவார்கள். இந்நிலை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளவை அதிகமாக வினியோகித்து காப்பாற்ற முடியும். அதற்கு மாறாக நுரையீரலுக்கும் குறைந்த அளவு கதிர்வீச்சு மூலம் தீர்வு காணலாம். புற்று நோயாளிகளுக்கு 6 ஆயிரம் சென்டிகிரேடு அளவுக்கு கதிரியக்கம் செலுத்தப்படும். கொரோனா நோயாளிக்கு நுரையீரலில் 100 சென்டிகிரேடு அளவுக்கு கதிரியக்கத்தை செலுத்தினால், சைட்டோகைன் ஸ்டாம் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, வைரஸ் அழிந்து ஆக்சிஜன் தேவை குறையும். இவர்கள் ஓரிரு நாளில் 12 லிட்டர் முதல் 14 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையை மாறி, இரண்டு முதல் மூன்று லிட்டர் ஆக்சிஜன் கிடைத்தால் போதுமானதாகும். இச்சிகிச்சையால் வேறு பக்க விளைவு ஏற்படாது. ஈரோடு கேன்சர் சென்டரில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 11 பேருக்கு கதிரியக்க சிகிச்சை வழங்கி 9 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இச்சோதனைக்கு எத்திக்கல் போர்டு ஒப்புதல் பெற்று, கிளினிக்கல் டிரையல்ஸ் ரீஜீஸ்டரி – இந்தியாவிடமும் ஒப்புதல் பெற்றுள்ளோம். இந்தியாவில் மத்திய அரசு கொரோனா நோயாளிக்கு கதிரியக்க சிகிச்சை வழங்க 35 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதில் தமிழகத்தில் ஈரோட்டில் ஈரோடு கேன்சர் சென்டர், மதுரை, சேலம் போன்ற ஊர்களில் தலா ஒரு மருத்துவமனையும் அனுமதி பெற்றுள்ளோம். மிக விரைவில் அதிக மருத்துவமனைகளுக்கு அனுமதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே