ரூ.3.5 லட்சம் நிவாரண நிதி வழங்கல்ஈரோடு ஜூன் 5: ஈரோட்டில் உள்ள வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் தலைவரும் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தென்னரசு, செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் 2.50 லட்சம் ரூபாயை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.பொருளாளர் ஆர்.முருகானந்தம், கவுரவ தலைவர் தேவராஜ், துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் கே.பி.சக்திவேல், ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாயை முதல்வரின் கொரானா நிவாரண நிதிக்கு அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினர்.பொருளாளர் ஆர்.நாகராஜன், துணை தலைவர்கள் எஸ்.ஏ.ஜோதிபாசு, வி.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே