ஈரோடு சூன் 10: ஈரோடு மாவட்ட அரிமா சங்கம் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினர். இப்பொருட்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இணை இயக்குனர் கோமதியிடம் ஒப்படைத்தார்.ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்சி மீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, ஆக்சிஜன் முககவசம், கவச உடை, என்–95 மாஸ்க், 3 லேயர் மாஸ்க், கிளவுஸ் போன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்கோவன், டாக்டர் ராமகிருஷ்ணன், தனபாலன், மகேஸ்வரன், முத்தையா, டாக்டர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே