ஈரோடு சூன் 13: தென்னக ரயில்வே துறையில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 378 அப்ரன்டிஸ் பணியாக மெக்கானிக், எலக்ட்ரிஷியன், டீசல் மெக்கானிக், ஏர் கன்டிஷன் மெக்கானிக், பிட்டர், வெல்டர், டர்னர், பெயிண்டர் என பல்வேறு பயிற்சிக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.பயிற்சி முடித்தவர்களுக்கு ரயில்வே துறை வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற, தொழில் முறை பயிற்சி படித்து முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜூன் 30 வரை https://iroams.com/apprentice/recruitmentindex க்கு அனுப்பலாம்.இப்பணிக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்பும் பொருட்டு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் காவல் உதவி மையம் நேற்று துவங்கப்பட்டது. எஸ்.பி., சசிமோகன் மையத்தை துவக்கி வைத்து, ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்து வந்து, பயன் பெறலாம், என கேட்டு கொண்டார். கூடுதல் சந்தேகங்களுக்கு, 96552 20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என எஸ்.பி., சசிமோகன் கேட்டுக் கொண்டார்.

நிருபர்.
ஈரோடு டுடே