ஈரோடு ஆக 12:

ஈரோடு ரத்தினகிரி இயற்கை விவசாயிகள் சங்க உறுப்பினர் தோட்டங்களை, விதை சான்று துறை இயக்குனர் சுப்பையன் கள ஆய்வு செய்தார். ஈரோடு ரத்தினகிரி இயற்கை விவசாயிகள் சங்கம் (ஈரோபா) கடந்த ஆண்டு டிச., மாதம் மொடக்குறிச்சி, கொடுமுடியில் இயற்கை விவசாயிகளை கொண்டு துவங்கப்பட்டது. தோட்டக்கலை துறையின் ஒருங்கிணைப்புடன், தமிழக அங்கக சான்றுத்துறையின் கீழ், இச்சங்க விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ஈரோபா சங்க உறுப்பினர்களின் தோட்டங்களை விதைச்சான்று துறை இயக்குனர் சுப்பையன் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு நுட்பங்களை விளக்கினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today