தாளவாடி மே 31: தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள விவசாய தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் வருகின்றன.தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தில் மூன்று யானைகள் நேற்று அதிகாலை, தாளவாடி சேஷன் நகர் பகுதிக்கு வந்தன. குணசேகரன் என்ற விவசாயிக்கு சொந்தமான தக்காளி தோட்டத்தில் புகுந்தது. அங்கு தக்காளியை பறித்து உண்ட யானைகள், அச்செடிகளை மிதித்து சேதப்படுத்தியது.இதை கவனித்த பிற விவசாயிகள், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். அவ்வாறு விரட்டப்பட்ட யானைகள், செல்லும் வழிகளில் உள்ள தோட்டங்களில் பல்வேறு பயிர், மரங்களை சேதப்படுத்தின. வெகுநேரம் விவசாயிகளின் விரட்டியபின், வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

நிருபர்.
ஈரோடு டுடே