ஈரோடு ஜூன் 2: கொரானாவுக்கான ஊரடங்கால் வீடு, வணிக நிறுவனங்கள், பிற கட்டிடங்களில் மின் கணக்கீட்டாளர்கள் மின் கட்டண கணக்கீடு செய்ய இயலவில்லை.இதனால் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் தாங்கள் செலுத்திய மின் கட்டண தொகையாக இப்போதும் செலுத்தலாம். அக்கட்டணம் அதிகம் என நுகர்வோர் கருதினால் கடந்த மார்ச் மாத மின் கட்டணத்தை செலுத்தலாம். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் வரும் ஜூலை மாத கட்டணத்தில் சரி செய்யப்படும்.தங்கள் மின் பயன்பாட்டை நுகர்வோர் புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப் வாயிலாக மின்வாரிய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி, சரியான கட்டணம் பதிவை குறுஞ்செய்தியாக பெறலாம்.இதற்காக ஈரோடு மண்டல வாட்ஸ் ஆப் புகார் மொபைல் எண்: 9445851912, ஈரோடு நகரியம் செயற்பொறியாளர்: 9442591822, ஈரோடு தெற்கு செயற்பொறியாளர்: 94458 52180, பெருந்துறை செயற்பொறியாளர்: 9445852190, ஈரோடு பொது செயற்பொறியாளர்: 9445852150, ஈரோடு துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர்: 9994456233, ஈரோடு மேற்பார்வை பொறியாளர்: 9445851900 என்ற எண்களுக்கு மின் பயன்பாட்டை போட்டோவாக அனுப்பலாம். திருத்தி அமைக்கப்பட்ட மின் கணக்கீட்டை, www.tangedco.co.in என்ற இணைய தளத்தில் Consumer Ledger Reading Details பகுதியில் நுகர்வோர் அறியலாம் என ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கு.இந்திராணி செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே