ஈரோடு மே 30: ஈரோடு அடுத்த மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் 31 ம் தேதி மற்றும் ஜூன் 1, 2ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.மே 31 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டல் மின் பாதையில் உள்ள தங்கம் நகர், வித்யா நகர், மேல் திண்டல், சிவன் நகர், சக்தி நகர், பளையபாளையம், செல்வம் நகர், ராஜீவ் நகர், செங்கோடம்பாளையம், சின்னசெங்கோடம்பாளையம், சாமுண்டி நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.மேட்டுக்கடை துணை மின் நிலையத்தின் வள்ளிபுரத்தான்பாளையம், நடுவலசு மின் பாதையில் ஜூன் 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வேப்பம்பாளையம், ஸ்ரீராம் நகர், அத்தப்பம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பவளத்தாம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் மின்சாரம் இருக்காது.ஜூன் 2ம் தேதி காரைவாய்க்கால் மின் பாதையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதனால் தொட்டிபாளையம், ராயபாளையம், நசியனுார், கந்தம்பாளையம், கங்காபுரம் குடிநீர் நிலையம், வாவிக்கடை குடிநீர் நிலையம் பகுதியில் மின்சாரம் இருக்காது, என ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் சொ.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நிருபர்.
ஈரோடு டுடே