ஈரோடு ஜூன் 3: ஈரோடு, பெரியார் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு தி.மு.க., பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் மாலை அணிவித்து, இனிப்பும், உணவு பொட்டலமும் ஏழைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.கொடுமுடி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சின்னசாமி மூலம், வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், துாய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.கொளாநல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார பணியாளர்கள், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பேரூர் கழக செயலாளர் ப.சண்முகம் தலைமையில் வழங்கினர்.
நிருபர்.
ஈரோடு டுடே