ஈரோடு நவ 19:

நேஷனல் கேடட் கார்ப்ஸ் டிபார்ட்மென்டில் காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் கேடட் கார்ப்ஸ் டிபார்ட்மென்டில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்டென்ட் – -1 பணியிடம், அலுவலக உதவியாளர் – -2 பணியிடம், சவுக்கிதார் – -3 பணியிடம் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆள் தேர்விற்கு முன்னாள் படைவீரர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதிகள் உடைய முன்னாள் படைவீரர்கள் https://cms.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Commanding Officer,(TN) Girls Bn Ncc, NO.28, Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwalkam, Chennai- – 600084 என்ற முகவரிக்கு 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எனவே, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/