ஈரோடு மே 31: கொரானா முன்கள பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.தி.மு.க., சார்பில் கொரானா முன்கள பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும், 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர் நேற்று வழங்கினர். மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, மூன்று சக்கர வாகனமும் வழங்கப்பட்டது.திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபு, பேரூர் செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் காயத்திரி இளங்கோ, துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மேற்கு ஒன்றிய இளைஞரணி கொடுமணல் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

நிருபர்.
ஈரோடு டுடே