ஈரோடு ஜூன் 3: ஈரோடு திண்டலில் ஏழைகளின் இளைய சகோதரிகள் என்ற முதியோர் இல்லம் உள்ளது. இங்கு, 76 முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு  தங்கியுள்ள முதியவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது.அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 40 பேருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் 40 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 36 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.முதியோர் இல்லத்தில் கொரோனா பரவலை அடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கையாக நேற்று கிருமி நாசினி தெளித்தனர். வெளி நபர்கள் அங்கு வராமல் இருப்பதற்காக அறிவிப்புபலகை வைத்து, இல்லத்தை மூடி வைத்துள்ளனர்.

நிருபர்.
ஈரோடு டுடே