ஈரோடு மாவட்டத்தில் 1,742 பேருக்கு கொரானாவால் அதிர்ச்சிஈரோடு மே 31: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1,742 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக, தினமும் 1,500 முதல் 1,750 பேர் வரை கொரானாவால் பாதிக்கின்றனர். அதுபோல இறப்பு எண்ணிக்கையும் தினமும் 10 முதல் 22 வரை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலினே நேரில் வந்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு விரைவில் கட்டுப்படுத்த உத்தரவிட்டு சென்றார்.இந்நிலையில் நேற்று 1,742 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு, இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 56,644 என உயர்ந்துள்ளது. நேற்று 1,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்து வீடு சென்றவர்கள் எண்ணிக்கை 40,408 என உயர்ந்துள்ளது.அதேநேரம் தற்போது 15,888 பேர் கொரானா பாதித்து, வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, எட்டு பேர் இறந்ததால், இதுவரை இறந்தவர்கள் 348 பேர் என உச்சம் தொட்டுள்ளது.நேற்றைய எண்ணிக்கை, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நிருபர்.
ஈரோடு டுடே