ஈரோடு சூன் 14: ஈரோடு உணர்வுகள் அமைப்பு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் நடந்தது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ, திருமகன் ஈவெரா, மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி போன்றவற்றை வழங்கினார். இந்த அமைப்பு சார்பில் ஊரடங்கு துவங்கியது முதல் போலீஸ், தூய்மை பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக மூலிகை சூப் உள்ளிட்ட நலப்பணிகள் செய்து வருவதற்காக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா வழங்கினார்.ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, பாஷா, ராஜேஷ்ராஜப்பா, பிரபு, பூபதி, சரஸ்வதி, அபு கிருஷ்ண அபிலாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே