ஈரோடு சூன் 22: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஈரோடு மாவட்ட அளவில் 20 ஆயிரம் பேருக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களால் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் முகாம்களில் வரிசையில் காத்திருந்து ஊசி போட இயலவில்லை. இதனால், இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி போடுகின்றனர். சில முகாம்களில் பத்துக்கும் மேற்பட்ட டோக்கன்களை வைத்திருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குகின்றனர். இருப்பினும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஏற்பட்டில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் சில இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளிகள் மட்டும் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். இவ்வாறு நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டனர். இப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். அவர்களின் தேவைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட அளவில் இதுவரை இரண்டாயிரம் பேருக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே