ஈரோடு ஜூன் 2: கொரானா பரவல் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளதாக, கொ.ம.தே.க, பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:கொரானா முதல் பரவலின்போது பல முன்னேற்பாடுகளை வகுத்து செயல்படுத்திய மத்திய அரசு, இரண்டாம் பரவலின் அமைதி காக்கிறது. முன்னேற்பாடுகளை மாநில  அரசுகளே செயல்படுத்துகிறது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மாநில அரசுகள் தடுமாறுகிறது. மத்திய அரசு தேவையான உதவிகளை தராமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.ஆக்சிஜன், தடுப்பூசியை மாநிலத்துக்கு மத்திய அரசு முழுமையாக தரவில்லை. இரண்டாம் பரவலில் கிராமங்களில் இறப்பு அதிகம். தொழில் துறையினருக்கு முதன் பரவலின்போது மத்திய அரசிடம் வழங்கிய சலுகைகள், இரண்டாம் பரவலில் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். நாட்டு மக்களையும், தொழில் துறையினரையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது.பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்பு, வருவாய் இழப்பு பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.தமிழகத்துக்கு அதிக பாதிப்பு உள்ளதால், நான்கு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்து தங்கி இருந்து பாதிப்புகளை சரி செய்ய உதவியாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் விகிதாச்சாரத்தின்படி கூட தமிழகத்துக்கு தடுப்பூசி தரவில்லை, என்பதை மக்கள் கவனிக்கின்றனர். மாநில அரசுகளை மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே