ஈரோடு, மே 31: மளிகை பொருட்களை போன், வாட்ஸ் ஆப், மெயில் மூலம் தெரிவித்து மொத்தமாக பெற்று செல்லவும், வீட்டில் டோர் டெலிவரி செய்யும் வசதியை மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கினர்.-ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமானதால், தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதேநேரம் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, மளிகை பொருட்கள் கிடைக்க மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வேளாண் வணிகத்துறை மூலம், தள்ளுவண்டி, வேன், லாரிகள் மூலம் அனுமதி பெற்று விற்பனை நடக்கிறது. மாவட்ட அளவில் கடந்த 22ம் தேதி முதல் 1,000க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, வேன், லாரிகள், காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.ஜூன், 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி சார்பில் tnurbantree.tn.gov.in/erode/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்தது. இந்த இணையதள முகவரிக்கு சென்று லிங்கை ‘கிளிக்’ செய்தால், அதில் மளிகை கடைகளின் பெயர்கள், மளிகை கடைக்காரர்களின் பெயர்கள், அவர்களது செல்போன் எண்கள், மளிகை கடை முகவரிகள், அவர்களின் இ–மெயில் ஐ.டி.,கள் உள்ளன.அதில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து, அதற்கான ரசீதை கடைக்காரர்கள் அனுப்புகின்றனர். 1,000 ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கி இருந்தால், வீட்டுக்கு வந்து பொருளை கொடுத்து, பணத்தை பெற்று செல்கின்றனர். இன்னும் சிலர், தாங்களே நேரில் வந்து பெற்று செல்ல விரும்புவதாக தெரிவிப்பதால், அதற்கான ரசீதுடன் கார், டூவீலரில் வந்து அப்பொருளை பெற்று செல்ல மாநகராட்சி மற்றும் போலீஸ் அனுமதி வழங்கி உள்ளனர்.இதனால் நேற்று மொத்தமாக மளிகை ஆர்டர் கொடுத்த பலரும், அதற்கான ரசீதை காண்பித்து அனுமதி பெற்று வாகனங்களில் பொருளை எடுத்து சென்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே